மன்னிப்பு கோரியது தமிழக அரசு…. எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்தது உச்சநீதிமன்றம்….!!!!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி சுதந்திரமான அமைப்பாக இருக்கும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கமல்ல. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது என்று பதிலளித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததற்கு கொரோனாவை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. தமிழக அரசு உயரதிகாரிகளின் நிம்மதியற்ற மன்னிப்பை ஏற்று வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *