மன்னர் சார்லஸ் உயிராக காதலித்த கமிலாவை விட்டு…. டயானாவை முதலில் மணந்ததற்கான காரணம் என்ன….? வெளியான உண்மை தகவல்….!!

மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் இப்பொழுது வெளியாகியுள்ளது.

சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சார்லஸ் – கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்தாலும்  அவர்கள் மண வாழ்க்கையில் இணையவில்லை. பின்னர் சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தார். அதேபோன்று கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்தார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2005-ஆம் ஆண்டு தான்  திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்து டெய்லி  ஸ்டார் பத்திரிக்கையில் கூறியதாவது, “அரச குடும்பம் கமிலாவை ஒரு பொருத்தமான இளவரசியாக பார்க்கவில்லை” என்று கூறப்படுகின்றது.

மேலும் அரச குடும்ப நிபுணர் பெடெல் ஸ்மித்தின் கூற்றுப்படி, “கமிலா அனுபவம் வாய்ந்த மற்றும் பல விடயங்களை அறிந்த பெண்ணாக கருதப்பட்டிருக்கின்றார். சார்லஸை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு அப்பாவிப் பெண்ணை தேர்வு செய்யவே அரச குடும்பம் விரும்பியுள்ளது. அதற்கு சரியான நபராக டயானா தான் இருப்பார் என அவர்கள் நினைத்தனர்” என்று  கூறப்பட்டுள்ளது. அதே போன்று சார்லஸும் கமிலாவும் ஆரம்பத்தில் பிரிந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தி டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது, “கமிலாவுக்கு நிச்சயதார்த்தம் என பொய்யான அறிவிப்பை அவர் தந்தை வெளியிட்டிருந்தார். பின்னர் உண்மையிலேயே அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.