மனைவியை பலவந்தம் செய்வது குற்றமாகுமா?….. 2 நீதிபதிகள் வழங்கிய முரண்பட்ட தீர்ப்பு….!!!!

மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் கட்டாய உறவை மேற்கொள்வது குற்றமாக கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தாம்பத்திய உறவு மேற்கத்திய நாடுகளில் குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. அதற்காக கண்மூடித்தனமாக இந்தியாவும் பின்பற்ற வேண்டியதில்லை. மனைவியுடன் கட்டாய உறவு கொள்வதற்கு முன் நம் நாட்டிற்கே உரிய எழுத்தறிவு, பெரும்பாலான பெண்களுக்கு இல்லாமலிருக்கும் நிதி அதிகாரம், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் ஏழ்மை ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது .

இந்நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு வரும்போது மனுதாரர்கள் தரப்பு, எதிர் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இரண்டு முரண்பட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். இதில் நீதிபதி ராஜீவ் ஷக்தர் வழங்கிய தீர்ப்பில், ‘‘தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது’’ என்றார். இதையடுத்து, ஹரிசங்கர் முரண்பட்டு, ‘‘தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது இல்லை. புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் மூலம் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தீர்ப்பில் தெரிவித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *