மனைவியை அடித்ததால் சோகம்… கணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தேர்வில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் 1000 ரூபாய் கட்டுவதற்காக பாப்பா சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் கொடுக்க மறுத்ததால் கணவருக்கு தெரியாமல் பாப்பா செட்டு பணம் கட்டியுள்ளார். இதனையறிந்த சேகர் ஆத்திரமடைந்து மனைவியிடம் தகராறு செய்து பாப்பாவை அடித்துள்ளார்.

இதனையடுத்து மனைவியை அடித்ததால் சேகர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைதொடர்ந்து விரக்தியடைந்த சேகர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாப்பா உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சேகரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சேகர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *