மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்வது குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மனைவியின் சம்மதம் இன்றி கணவன் பலவந்தமாக உறவு கொள்வது அறிக்கையிடப்பட்டுள்ளது, ஆனால் அதை பாலியல் பலாத்காரமாகக் கருதுவது மிகக் கடுமையானது என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது மனுவில், கணவன்-மனைவி உறவுகளில் தனிநபர் ஒப்புதலை நிரூபிப்பது கடினம் என்றும், அதனால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பது சிக்கலானது என தெரிவித்துள்ளது. அதன்பிறகு மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு ஈடுபடுவது குற்றமென அறிவித்தால் அது திருமண உறவில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதனால் இதனை குற்றம் என கருத முடியாது.
இந்த விவகாரத்தில் மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றம் என சுப்ரீம் கோர்ட் அறிவிக்க அதிகாரம் இல்லை. இது சமூக ரீதியான பிரச்சினையே தவிர சட்ட ரீதியான பிரச்சனை கிடையாது. மேலும் இதனை குற்றம் என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை எனவும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.