மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு…. நண்பரை கொன்ற வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

நண்பரை கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்க குமார்(29) என்பவர் லோடு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கார்த்திக் ராஜா என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் தங்ககுமாரின் வீட்டிற்கு கார்த்திக்ராஜா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் தங்க குமாரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2015-ஆம் ஆண்டு கார்த்திக்ராஜாவை தங்க குமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்ககுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தங்ககுமாருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *