மனைவியின் செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்… டெய்லரை அடித்து உதைத்த கணவன்..!!

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய டெய்லருக்கு அடி உதை விழுந்தது.

நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்த 31 வயதான பிரபு என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் கடைக்குச் சென்று என் மனைவிக்கு செல் போனில் ஏன் எஸ்எம்எஸ் அனுப்பினால் என கேட்டு அவரை தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த டெய்லர் பிரபு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக போலீசாரில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி டெய்லர் பிரபு மற்றும் இளம் பெண்ணின் கணவர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *