“மனைவியின் குடும்பத்தினர் தான் காரணம்”…. என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோட்டில் இன்ஜினியரான அவினாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வைத்துள்ளார். இவருக்கு பவித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தற்போது பவித்ரா தேவி கணவரை விட்டு பிரிந்து அயனாவரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அவினாஷ் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு அவிநாசி அழைத்தனர். இதனால் மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவினாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவினாஷ் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது மனைவியின் குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுப்பதால் விவாகரத்திற்கு மனு கொடுத்தேன். ஆனால் அடிக்கடி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதால் விசாரணைக்கு வருமாறு அழைக்கின்றனர். இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்கிறேன். எனது சாவுக்கு எனது மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஆகியோர்தான் காரணம் என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.