மனைவியின் கடைசி ஆசை…. 17 லட்சம் ரூபாய் தங்க நகைகளை அள்ளிக்கொடுத்த…. கணவரின் நெகிழ்ச்சி செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார்.

அதையடுத்து அவர்  உயிரிழந்த பிறகு  ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் மனைவியின் 310 கிராம் எடையுள்ள நகைகள் அனைத்தையும் கோவிலுக்கு நன்கொடை அளித்துள்ளார். தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்க நகைகளை நன்கொடையாக அளித்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகாகாலேஸ்வரர் கோயில் நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *