ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர் சிரமப்பட்டு வந்துள்ளனர். ஆகவே இலவச வீட்டிற்காக வீட்டு வசதி வாரியத்தில் மல்லேஷ் விண்ணப்பித்துள்ளார்.

இதில் 2 ஆண்டுகளாக அலைந்தும் ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தம்பதியினர் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மனு அளித்த 10 நாளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே மாற்றுத்திறனாளியான 7 வயதுடைய சிறுவன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.