மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா… தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு…!!!!!

மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியதால் ஆட்சியர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகியுள்ளனர். இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபரான நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம், போலீசரும் தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இலங்கையில் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் தாக்கல் செய்ய சில நாடுகள் முடிவு செய்துள்ளது.

அதில் இங்கிலாந்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாதி, மான்டநெக்ரா, வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்கள் கண்காணிப்பதை ஐந்தாம் மனித உரிமை ஆணையர் தீவிர படுத்த வேண்டும். மேலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும் ஆய்வு செய்யவும் மனித உரிமை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எதிர்கால மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும். இலங்கையில் நல்லெண்ணத்தை ஊக்குவிக்க வேண்டும் தவறு செய்பவர்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்திற்கு மேலும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்த தீர்மானம் மீது இந்த வாரம் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகின்றது. இந்த பின்னணியில் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய உயர் பாதுகாப்பு மண்டலங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலைத்துள்ளார். மேலும் கொழும்பிலும் புறநகர்களிலும் இந்த மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இதற்கிடையே வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய ரணில் விக்ரமசிங்கே அந்த மண்டலங்களை கலைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே ஆசிரியர் நாடாளுமன்றத்தில் இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என அங்கு வசிக்கும் இலங்கை பிரதிநிதிகளிடம் அந்த நாட்டு எம்பிக்கள் இரண்டு பேர் உறுதி அளித்து இருக்கின்றனர்.