செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சி இ ஓ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் புகழ் பெற்ற வாய்ஸ் ஸ்டிக்கர் பத்திரிகையில் முன்னாள் கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகப்பெரிய அபாயத்தை விளைவிக்கும் எனக் கூறினார்.
ஆயிரக்கணக்கான நபர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு செய்து விடுவதால் பல வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கிய கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ கருத்து வல்லுநர்களிடையே கண்டனத்தை பெற்றுள்ளது.