மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இதய சம்மந்தப்பட்ட பிரச்சினையால் உயிரிழந்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் கோபாலபுரம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் உடலை பார்த்து சோகத்தில் ஆழ்ந்து, கண்ணீர் விட்டு அழுதனர்.
அங்கு வந்த அமைச்சர் துரைமுருகன், வைகோ, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். முரசொலி செல்வம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றியவர். அவர், அரசியல் விமர்சனங்களை “சிலந்தி” என்ற புனைப்பெயரில் எழுதுவதால் பிரபலமாக இருந்தார்.
முரசொலி செல்வத்தின் மறைவு, முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவிற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.