“மனமறிந்து பொய் சொல்கிறார் ஸ்டாலின்…. அந்த மனமே அவரைத் தண்டிக்கும்….!!” ஓபிஎஸ் காட்டம்….!!

ஜல்லிக்கட்டு குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பிரச்சாரம் செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்து மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, மக்கள் விரோத செயல்களை எல்லாம் செய்து இந்த வரலாற்றை எல்லாம் மறந்து இல்லை மறைத்து அவருக்கே உரிய பாணியில் வாயால் வடை சுட்டு இப்போது ஆட்சியை பிடித்துள்ள ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக காணொலி காட்சி வாயிலாக மூட்டை மூட்டையாக பொய்களை அவிழ்த்து விட்டு தனது கட்சியை வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது திமுகவும் காங்கிரசும் தான் அந்த தடைகளை தகர்த்தெறிந்து தற்போது ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது தான் அதிமுக.

இந்த உண்மையை இளைஞர்களிடம் ஸ்டாலின் எவ்வாறு கூறியுள்ளார் என்றால், நாங்கள் தான் ஜல்லிக்கட்டை நடத்த முன்மொழிந்தார் எனக் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு சோதனைகள் வந்தன. உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்தையும் கடந்து தான் அது நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்சியில் அமர்ந்து இருந்த திமுக எதனையும் கண்டு கொள்ளவில்லை. அதோடு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என முன்மொழிந்தது ஏனெனில் பிராணிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஜல்லிக்கட்டு தொடர்பாக கூறியது திமுக. தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனித் தமிழ்நாடாக அறிவிக்க வேண்டுமென்றும், இந்தியக் குடியரசுத் தினத்தை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார். மனமறிந்து பொய் கூறினால் அந்த மனமே நம்மை தண்டிக்கும் இதனை திமுகவினரும் அதன் தலைவரும் ஒருபோதும் மறக்கக்கூடாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *