மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கூலி தொழிலாளியான மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளா நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிவேலுக்கு 1 1/2 லட்ச ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.