தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் மனோரமா. இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. நகைச்சுவை என்றாலும் சரி, அழுகை என்றாலும் சரி, குணச்சித்திரம் என்றாலும் சரி அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார். ஆனால் அவருடைய மனதில் இருந்த ஒரே ஒரு குறை திருநங்கையாக நடிக்க முடியவில்லை என்பது மட்டும்தான்.

ஒருமுறை திருநங்கைகள் மனோரமாவை சந்தித்து விட்டு திரும்பிய போது அனைவரும் தங்களை கேலி பொருட்களாக நினைப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளனர். இதனை கேட்ட மனோரமா திருநங்கையாக நடிக்க விரும்பியுள்ளார். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறாமலேயே அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்து விட்டார்.