தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெங்கல் புயல் தனது கோர முகத்தை காட்டி சென்றது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணையில் 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

அதிக மழை என்ற காரணத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் மனசாட்சியை துறந்து விட்டு பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். அணைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது. அரசின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.