நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆதார், Cowin, UPI ஆகியவை முக்கிய சாதனைகளாக இருக்கின்றன.  கோவிட் நேரத்தில் 2 லட்சம் கோடி செலவில் மக்களுக்கு 28 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கியுள்ளோம் என்றார். 2023 ஜன.,1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கோவிட் காலத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியை போக்கினோம் என்று கூறினார்.