மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 7-வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. CPSE களில் 2007ஆம் ஆண்டு ஊதிய விகிதத்தில் இருப்பவர்களின் அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக அறிக்கைகளின் படி ஜூலை 2021ல், CPSE களின் அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 170.5 சதவீதமாக இருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக 159.9 % இருந்தது. மத்திய அரசு ஊழியர்களின் DA தற்போது 31 சதவீதமாக உள்ள நிலையில் கூடுதலாக 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 34% ஆக வழங்கப்பட இருக்கிறது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஊழியர்களுக்கு மட்டும் தற்போது DA 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 2007ஆம் வருட ஊதிய விகிதத்தின் கீழ் CPSE களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அல்லாத மேற்பார்வையாளர்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ள 14 சதவீதம் DA வினால் 184.1 சதவீதம் DA பெறுவார்கள். இதுவரையிலும் அவர்களுக்கு 170.5 சதவீதம் DA வழங்கப்பட்டு வந்தது.

இதை தவிர நிலுவையிலுள்ள 18 மாத DA பாக்கிகளைப் குறித்து ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிவிப்பின்படி , நிலை 1 ஊழியர்கள், டிஏ நிலுவைத் தொகை ரூ.11880 முதல் ரூ.37554 வரை பெறுவார்கள். இதையடுத்து நிலை 13 ஊழியர்கள் அவர்களின் அடிப்படை ஊதியம் ரூபாய் 1,23,100 முதல் ரூபாய் 2,15,900 வரை வழங்கப்படுகிறது. இது தவிர, லெவல்-14க்கு ஒரு ஊழியரின் கையில் DA பாக்கி ரூபாய் 1,44,200 முதல் ரூபாய் 2,18,200 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த அறிவிப்பினால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *