மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. சிறுபான்மையின மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரையிலும் பள்ளி மேற்படிப்புக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.