கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புது திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் புதிய நிதி ஆண்டு முதல் தொடங்கப்படயிருந்தது. இன்று முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், இனி பெண்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது ஒருமுறை செய்யும் முதலீட்டு திட்டம் ஆகும்.

எனினும் இதன் வாயிலாக கிடைக்கும் வட்டி இத்திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றி உள்ளது. இந்த திட்டத்தில்  பெண்களுக்கு 7.5% வட்டி கிடைக்கும். இது ஒரு நிலையான வைப்புத்திட்டம். எந்த வயதினரும் இதில் முதலீடு செய்யலாம். முதலீட்டு வரம்பு ரூபாய்.2 லட்சம் மட்டுமே ஆகும். இத்திட்டத்தில் பெண்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்ய இயலாது. இப்போது தபால் அலுவலகத்தில் 5 ஆண்டுக்கான FD-க்கு 7 சதவீத வட்டியும், 2 வருட FD-க்கு 6.8% வட்டியும் கிடைக்கிறது.