சார் அங்க வச்சுத்தான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் வைத்து மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினருக்கு கோவில் காலனி பகுதியில் வசிக்கும் ராஜசேகர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவர்கள் ராஜசேகர் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது ராஜசேகர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்து உறுதியானது. இதனையடுத்து அவரை  கைது செய்த காவல் துறையினர்  அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.