மது அருந்திய உறவினர்கள்…. வேன் டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கட்டிட தொழிலாளியை வேன் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புது வாணியர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு தனது சுய வேலை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் தனது உறவினரான பார்த்திபன் என்பவருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் வேன் டிரைவரான ஸ்ரீகாந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்ரீகாந்த்திற்கும், மணிவண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஸ்ரீகாந்த் தான் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் காயம் அடைந்த மணிவண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீகாந்த்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *