ஜனவரி 14 தை ஒன்றாம் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனிடையே நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது சொந்த பணத்தில் இருந்து 150 முதியவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “எந்த விளம்பரத்திற்காகவும் இல்லாமல் எனது மனதிருப்திக்காக இதை பண்ணுகிறேன். 2019 ஆம் வருடத்தில் இருந்து என்னுடைய ஊதியத்தில் 5 சதவீதத்தை ஒதுக்கி இவ்வாறு கொடுத்து வருகிறேன். சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதைப் பார்த்து மற்றவர்களும் செய்தால் அதுவே என் வெற்றி” எனக் கூறியுள்ளார்.