மதுரை மாநகராட்சி சுற்றறிக்கை சர்ச்சை…. உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு…. அதிரடி உத்தரவு…!!!

RSS தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலையை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் இடங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையையொட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.