மதுரை மாவட்ட மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு கண்டிப்பாக சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அண்ணாமலை கண்டிப்பாக மதுரையில் சுரங்கம் வராது என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அப்படி வந்தால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என்று கூறினார். இந்நிலையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவில் சுரங்கம் அமையாது என்றும் இது தொடர்பாக பொங்கலுக்கு பிறகு மத்திய அமைச்சர் அறிவிப்பார் என்றும் தற்போது அண்ணாமலை உறுதி கொடுத்துள்ளார். மேலும் அண்ணாமலை உறுதியாக சுரங்கம் மதுரையில் வராது என்று கூறியுள்ளார்.