மதுரையில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை கத்ரீனா கைஃப்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து என்ற பாடலுக்கு குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அதாவது மதுரையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் நடிகை கத்ரீனா கைஃப் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.