மதுரைக்கு போக ₹3870…… என்ன பிளைட்லயா?….. இல்ல பஸ்ல….. செம ஷாக்கில் மக்கள்….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன.

இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக பலமுறை அரசு எச்சரிக்கை விடுத்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதனை காதில் வாங்குவது இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக ரூபாய் 700 முதல் 1000 வசூல் செய்யப்படும் நிலையில் தற்போது டிக்கெட் விலை 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதாவது தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு தனியார் பேருந்துகளில் விமான டிக்கெட் அளவுக்கு பணம் வசூல் செய்யப்படுகிறது. உதாரணமாக அக்டோபர் 21ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் விலை 3870, சாதாரண நாட்களில் விமானத்திலேயே டிக்கெட் விலை 3500 தான். தீபாவளி நாளில் விமானத்தில் 8,500 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.