பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. மதுமிதாவும் அவரின் ஆண் நண்பரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கியுள்ளனர்.

சோழிங்கநல்லூர் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போலீஸ் ஒருவர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுமிதாவின் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.