மதுபோதையில் குளிக்க சென்ற முதியவர்…. தண்ணீரில் மூழ்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி இந்திராநகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான ராமசாமி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொண்ணுதாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த ராமசாமி பொன்-புதுப்பட்டி சேங்கை ஊரணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ராமசாமி தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராமசாமியின் உடலை மீட்டனர். பிறகு முதியவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *