மேற்குவங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அதற்கான செலவை மாநில அரசு மத்திய அரசும் பகிர்ந்து கொள்கிறது. பள்ளிகளில் மதிய உணவின் ஒரு பகுதியாக தற்போது மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை சேர்த்துள்ளதாக அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வாரத்தின் வெவ்வேறு நாட்களில் ஒவ்வொரு தொகுதிகளும் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 11.6 மில்லியன் குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் இதற்காக அரசு 371 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.