மதனிடம் பணத்தை இழந்தவர்கள்…. இதில் புகார் அளிக்கலாம் – காவல்துறை…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று  காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து [email protected] என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *