மண் வெட்டும் பணியில் ஈடுபட்ட பெண்….. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிலாக்கவிளை பகுதியில் கூலி தொழிலாளியான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மகேஸ்வரி செறுகோல் ஊராட்சியில் 100 நாள் திட்ட வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை மகேஸ்வரி சக தொழிலாளர்களுடன் காக்கையான் குளத்தின் கரையோரம் மண்வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி குளத்திற்குள் விழுந்த மகேஸ்வரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மகேஸ்வரியின் சடலத்தை மீட்டனர். பின்னர் மகேஸ்வரியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *