ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேற்றுவரை சுமூகமாகதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய பேச்சு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆம்பளையா இருந்தா” என்று அவர் கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டேபிளுக்கு அடியில் மண்புழு மாதிரி ஊர்ந்து போனீங்களே அதுதான் ஆண்மையா? என இபிஎஸ்ஸை திமுக MP கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். வேஷ்டிக்கும், மீசைக்கும், ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்? ஜெ., சசிகலா கால்களில் விழுந்தீங்களே, அவர்களுக்கெல்லாம் மீசை இருந்ததா? கொஞ்சம் அப்டேட் ஆகுங்க. 50,000 பணம் கொடுத்தால் அறுவை சிகிச்சையில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் ஆகலாம். இதெல்லாம் ஒரு பெரிய வீரமா? என்று சாடினார்.