மண்ணெண்ணெய் குடித்த 10 மாத குழந்தை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்….!!

10 மாத குழந்தை மண்ணெண்ணெய் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரோசனை போலன் தெருவில் எத்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாஸ்ட்லியா என்ற பத்து மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை குடித்து விட்டாள். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த குழந்தையை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *