மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை ஆறாம் தேதி மைதீ பழங்குடியினத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். பல மாதங்களாக அங்கு இணையம் முடக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு இணையம் மீட்டெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இருவரும் கொல்லப்பட்டது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. அவர்கள் இருவரும் வனப்பகுதியில் பிடிப்பட்டதும் பின்னால் ஆயுதம் ஏந்தியவர்கள் நிற்பதும் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.