உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் வரதட்சணையாக கொடுத்த பணத்தை மணமகள் வீட்டார் மணமகனிடம் கொடுத்துள்ளனர். அப்போது மணமகளின் சகோதரன் பணத்தை எண்ணிப் பார்க்குமாறு மணமகனிடம் கூறியுள்ளார். ஆனால் மணமகன் எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மணமகள் வீட்டார் மணமகனின் கல்வி குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் மணமகனுக்கு எழுத்தறிவு கூட இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் போது திருமண செலவில் இரு விட்டாலும் சமமான அளவில் கணக்கிட்டு கழித்துக் கொள்வதாக கூறினார்கள். மேலும் இதைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் அங்கிருந்து. கிளம்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.