“மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்”…. வெளியான படத்தின் டைட்டில்…!!!!!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்தநிலையில் மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் படத்தின் முதற்கட்ட பணிகளுக்கான தொடக்க விழா வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *