“மஞ்சூர்- கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்”….. வாகன ஓட்டிகள் அச்சம்…!!!!!

மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடைக்கு சாலை செல்கின்ற நிலையில் இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேருந்து கெத்தை வழியாக சென்ற பொழுது காட்டு யானைகள் குட்டியுடன் உலாவியது. பின் சாலையோரம் இருக்கும் மரக்கிளைகள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவற்றை உடைத்து அட்டகாசம் செய்ததால் அரசு பேருந்து அதன் பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தார்கள். பின் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதற்குப் பின் வாகனங்கள் அங்கு இருந்து சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *