மஞ்சள் காமாலை, ஆஸ்துமா பிரச்சனையா?… இதோ எளிய பாட்டி வைத்தியம்… நிரந்தர தீர்வு…!!!

மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண கைவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு கை வைத்தியம் நிரந்தர தீர்வாக அமையும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட விரைவில் குணமாகும். மூன்று நாட்கள் உப்பு மற்றும் புலி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்கள் ஊமத்தம் பூ, பூவரசன் பூ 5, ஆடாதொடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகைப்பிடிக்க ஆஸ்துமா தணியும்.