உத்திரபிரதேச மாநிலத்தின் சம்பாலிலுள்ள மசூதியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மதராச ஆசிரியர் மற்றும் அவருடைய 18 வயது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது மசூதியில் உள்ள மதராசா பள்ளியில் படிக்கும் தன்னுடைய சகோதரரை பார்ப்பதற்காக அந்த 13 வயது சிறுமி சென்ற நிலையில் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை தேடி சென்ற போது அங்குள்ள ஒரு அறையில் கிட்டத்த 2 மணி நேரத்திற்கு மேலாக சிறை வைக்கப்பட்டது தெரிய வந்தது. அந்த சிறுமியின் தாய் அங்கு சென்றபோது அந்த 18 வயது சிறுவன் அரைகுறை ஆடையுடன் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான புகாரில் மதராச பள்ளியின் ஆசிரியர் மற்றும் அந்த சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.