மக்கள் பீதியடைய வேண்டாம்…. தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது…. மத்திய அரசு வாக்குறுதி….!!

நிலக்கரி தட்டுப்பாட்டு எதுவும் இல்லை தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்திருந்ததனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரஅமித்ஷா, நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மின் துறை அமைச்சர் ஆர்.கே சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், போதுமான அளவு நிலக்கரி விநியோகம் இருக்கும் என நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர்:- “நேற்றைய தினம் 1.95 மில்லியன் டன்கள் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது சாதனை அளவாகும். இந்த அளவு வேகமான விநியோகத்தை தொடர்ந்து அதிகப்படுத்த உள்ளோம். பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என நம்புகிறோம். மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. இந்த சர்வதேச விலை உயர்வு உள்நாட்டு நிலக்கரி உற்பத்திள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . வரும் 21ஆம் தேதிக்குப் பின்னர் நிலக்கரி உற்பத்திி அளவை 2 மில்லியன் டன்களாக உயர்த்த உள்ளோம் . எனவே அந்தந்த மாநிலத்தின் தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என நாங்கள் முழு நாட்டிற்கும் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *