மக்கள் பணியில்…. நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சி…. முதல்வர் முக ஸ்டாலின்…!!!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை
சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தியதாலும், மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளும்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டதாலும் தான் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் “மக்கள் பணியில் நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சி “தோழமை கட்சிகளின் கோரிக்கைகள் ,ஊடகங்களில் விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வை, பதிவுகள் ஆகியவையும் எதிர்க்கட்சியின் பணியே. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு மக்கள் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *