மக்கள் நீதி மலரும்… அப்போ எந்தப்பக்கம் ஓடுவீங்க…? கமல்ஹாசன் கேள்வி…!!!

தமிழகத்தில் மக்கள் நீதி மலரும் போது எந்த பக்கம் ஓடுவீர்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை அவர் பகிர்ந்து வருகிறார். அதன்படி அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்களால் மக்கள் நீதி மலரும்போது எந்தப்பக்கம் ஓடுவீர்?! #இனி- நாம்” என்று பதிவிட்டுள்ளார்.