“மக்கள் நல திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்”… மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டமன்றத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் இ.பெ.செந்தில்குமார் ஆவார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பழனி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், பழனி பச்சையாறு அணை திட்டம் ஆகியவை தொடங்கப்படும் என்றார். கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்துசெட், ஆலமரத்துக்களம், வரதமாநதி அணைப்பகுதி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் இ.பெ.செந்தில்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், எந்த நலத் திட்டங்களும் தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சி வெற்றி பெற்றால்தான் அனைத்து தரப்பினருக்கும் நல்ல ஆட்சி அமையும். பழனி நகரின் நீண்டகால கோரிக்கையில் ஒன்றான பாதாள சாக்கடை திட்டம் எனக்கு வாக்களித்தால் தான் நிறைவேற்றப்படும். பழனி பகுதியில் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் வழிவகை செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.