மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்..‌. கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… போலீஸ் சூப்பிரண்டு உறுதி..!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குழு தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கென்னடி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மணுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என போலீஸ்  சூப்பிரண்டு உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன் பெற வேண்டும். மேலும் 10581 என்ற எண் மூலமாக கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

Leave a Reply