“மக்கள் இனிமே இதைத் தேடி அலைய வேண்டாம்”….. அமைச்சர் பெரியகருப்பன அதிரடி….!!!!

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் கிராமத்தில் 18வது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவத்துறையின் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை ரூபாய் 46 லட்சம் மதிப்பில் மாநிலம் முழுவதும் அரசு வழங்கியுள்ள நிலையில், இப்போது மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு இந்த வாகனத்தை அமைச்சர் பெரிய கருப்பன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சுமார் 5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மருத்துவ முகாமில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்கள் குறித்தும் பயன்பாடு குறித்தும் பார்வையிட்டதோடு, அதன் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *