மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் எஸ்.புதூர், சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். சிங்கம்புனரி கிருக்காக்கோட்டை விலக்கிலிருந்து அணி வகுப்பு தொடங்கி காரைக்குடி, திண்டுக்கல் சாலை வழியாக பெரியகடைவீதி சென்று மீண்டும் சிங்கம்புணரி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது.