மக்களை வஞ்சிக்கும் செயல்….. இதுதான் திராவிட மாடலா….. ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்….!!!!

ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன். ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.