மக்களே ஹேப்பி நியூஸ்… கூட்டுறவு வங்கிகளில் இன்று(பிப்…28) முதல்?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கூட்டுறவு வங்கிகளில் இன்று முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரக் உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பயனாளிகள் விபரம் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்ன ஆனது? என பிரச்சாரம் செய்தனர்.  தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் காரணமாக திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் கூட்டுறவு துறை அறிவித்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாக உள்ள கூட்டுறவு வங்கிகளில் இன்று முதல் ஐந்து சவரன் நகை தள்ளுபடி பயனாளிகள் தங்களின் நகை களை பெற்றுக்கொள்ளலாம்.  இதுபற்றி கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் பேசும்போது தள்ளுபடி பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் நகைகளுடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படும் என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *